சூாிக்கு அடிக்கும் யோகம்.

by Admin / 07-06-2024 03:29:34pm
சூாிக்கு அடிக்கும் யோகம்.

 வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற விடுதலை படத்திற்கு பிறகு விடுதலை 2 படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் வெற்றிமாறனுடைய தயாரிப்பில் வெளியான கருடன் படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் முதல் நாளிலே படம் 15 கோடிக்கு மேல் வசூலை எடுத்ததாகவும் தற்பொழுது அது 27 கோடியாக மாறி இன்னும் ஒரு சில நாட்களில் 50 கோடியை வசூலித்து தரும் என்கிற கருத்து நிலவுகிறது. இதன் மூலம் சூரியின் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்காமல்..... தொடர்ந்து கதாநாயகனாக கதைகளை தேர்ந்து நடிப்பார் என்றும் அவருடைய சம்பளம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறதாகவும் தகவல்.

பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில்., அரண்மனை-4 க்கு பிறகு கருடன் வசூலை ஈட்டி கொண்டிருக்கிறது.. பெரிய பட்ஜெட் படங்கள் அதிகம் வராது இருப்பதால் அறிமுகமான நடிகர்களின் இயக்குனர்களின் படங்கள் தற்போது வசூலை வாரிக் கொண்டிருக்கின்றன. மாதத்திற்கு மூன்று நான்கு சிறிய முதலீட்டு படங்கள் வெளி வந்தாலும் கதாநாயகன் கதாநாயகி இயக்குனர் தயாரிப்பு நிறுவனம் பிரபலமாகாத நிலையில் திரையரங்குகளில் ஒரு சில நாள்களில் திரையிடப்பட்டாலும் ரசிகர்கள் செல்லாமல் படம் தூக்கப்பட்டு விடுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், தமிழ் திரை பட உலகம் ஒரு தேக்கமான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்று திரையுலகத்தினர் கருதி வருகின்றனர்.

 

Tags :

Share via