இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி...

by Admin / 10-08-2021 12:40:37pm
இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி...

இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 
கொரோனா தொற்றுக்கு எதிராக உலகம் முழுதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் 'கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி' உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு 'கோவின்' என்ற இணையதளம் துவங்கியுள்ளது. இதில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்தலாம்.
 
அதற்கான சான்றிதழையும் அந்த இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரும், இந்த இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. வெளிநாட்டினர் தங்களது பாஸ்போர்ட் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via