2 வயது குழந்தையை காவு வாங்கிய சர்க்கரை நோய்

by Staff / 16-06-2024 05:14:14pm
2 வயது குழந்தையை காவு வாங்கிய சர்க்கரை நோய்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி தமிழ்செல்வி. இந்த தம்பதிக்கு 2 வயதில் லித்திகா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் (ஜூன் 14) இரவு வாயில் நுரை தள்ளி 2 வயது குழந்தை மயங்கியுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்ததில் குழந்தைக்கு சர்க்கரை அளவு 400 இருந்துள்ளது. இதனையடுத்து அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது.

 

Tags :

Share via