ராமநாதபுரம் தொகுதி பிரச்சனைகளை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: எம்.எல்.ஏ. தகவல்

by Admin / 10-08-2021 05:24:59pm
ராமநாதபுரம் தொகுதி பிரச்சனைகளை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: எம்.எல்.ஏ. தகவல்

கொரோனா பேரிடர் கால வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரில் சென்று மனு கொடுப்பதில் சிரமம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

தொகுதி மக்களின் பிரச்சனைகள், சட்டமன்ற அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் மூலம் தீர்வு காணப்படுகின்றன.

கொரோனா பேரிடர் கால வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரில் சென்று மனு கொடுப்பதில் சிரமம் உள்ளது.

இதனை போக்க தொகுதி சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “நம்ம எம்.எல்.ஏ.” என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை, மின்சாரம், இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, போக்குவரத்து உள்பட பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சனைகளை களைய வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரம் தொகுதிக்கு 63849 41818 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு குறைகளை பதிவு செய்யலாம். அதற்கான தீர்வு உடனே காணப்படும்.

மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags :

Share via

More stories