இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் கேரளா...

by Admin / 12-08-2021 12:00:15pm
இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் கேரளா...

 

நாடு முழுவதும் புதிதாக 41 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கொரோனா 2-வது அலைக்கு பின், குறைந்து வந்த தொற்று பாதிப்பு சமீபகாலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்தது தான் என கூறப்படுகிறது

. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்று பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 987 ஆக உயர்ந்துள்ளது.
 
நேற்று மட்டும் தீவிர தொற்று காரணமாக 490 பேர் பலியாகி உள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இருப்பினும் தொற்றிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை 97 புள்ளி 45 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதிவான புதிய பாதிப்புகளில் 57 சதவீதம் கேரளாவில் பதிவான பாதிப்பு எண்ணிக்கை என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo