எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியாகாந்தி இன்று ஆலோசனை

by Editor / 20-08-2021 11:13:12am
எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியாகாந்தி இன்று ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பின்பேரில் இன்று நடக்க உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது... மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

2024-ம் ஆண்டு நடக்க உள்ள எம்பி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.. இந்த முறை பாஜக-வை வீழ்த்தும் நோக்கில், ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரளவும் தீவிரம் காட்டி வருகின்றன.இதற்கான முதல் முயற்சியை சரத்பவார் எடுத்தார்.. பிறகு மம்தா பானர்ஜி எடுத்தார்.. இதற்காக டெல்லி சென்று சோனியா உட்பட பல்வேறு தலைவர்களை மம்தா நேரில் சந்தித்து பேசிவிட்டும் வந்தார்.இதற்கு பிறகு சோனியா காந்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயல இருப்பதாக தகவல்கள் வெளியானது.. அதே ஆனாலும், இந்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் போதிய பலன் தரவில்லை என்றே தெரிகிறது.. காரணம், கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது...நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி சுப்ரீம்கோர்ட் கண்காணிப்பில் கீழ் விசாரணை நடத்துவது, சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட 14 எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டன

எனவே, இந்த ஒற்றுமையை எதிர்காலத்திலும் அப்படியே தொடர்வது, வரப்போகும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவை தோற்கடிப்பது போன்றவற்றிலும் இணைந்து செயல்பட சோனியா காந்தி விரும்புகிறார்... அதனால்தான், இது தொடர்பாக, இன்று, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்திருந்தார்.. இதற்காக கடந்த வாரமே சோனியா காந்தி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.. கூட்டணி அமைக்கும் முயற்சியாக, அத்தலைவர்களுடன் இன்று ஆலோசனையும் நடத்த உள்ளார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இந்த கூட்டம் நடக்க உள்ளது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது... இந்த அழைப்பை ஏற்று, இந்த கூட்டத்தில் ஸ்டாலின், மம்தா பனார்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மொத்தம் 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளான இன்று நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக அரசுக்கு எதிராக வியூகங்கள் வகுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன..

 

Tags :

Share via