தேசியக்கட்சியானது ஆம் ஆத்மி 

by Editor / 10-04-2023 08:49:22pm
தேசியக்கட்சியானது ஆம் ஆத்மி 

டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேசிய கட்சி எனும் அங்கீகாரத்தை இழந்துள்ளது. மேலும், தற்போது பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம், பகுஜன் சமாஜ், என்.பி.பி. ஆகிய கட்சிகள் தேசிய கட்சிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via