ஜப்பானில் 11 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

by Admin / 16-08-2021 11:10:13am
ஜப்பானில் 11 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

 

ஜப்பானில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9.43 லட்சத்தை கடந்துள்ளது.

ஜப்பானில் 11 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு
கொரோனா பரிசோதனை

ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த சில வாரமாக அதிகரித்து காணப்படுகிறது.
 
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஜப்பான் 30-வது இடத்தில் உள்ளது.

ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 20,366 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது.
 
இதேபோல், 25 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,383 ஆக உள்ளது. மேலும் 1.49 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via