தமிழக முதலமைச்சர் -பிரதமர் ஆற்றிய உரை

by Admin / 27-05-2022 12:00:14am
தமிழக முதலமைச்சர் -பிரதமர் ஆற்றிய உரை

தமிழக முதலமைச்சர்  ஆற்றிய உரை

"தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை த்தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமருக்கு நன்றி.தி.மு.கஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது.நாட்டின் ஒட்டுமொத்தவளர்ச்சியில்தமிழகத்தின்பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.கல்வி,பொருளாதாரம்,மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடுசிறப்பாக விளங்குகிறது.மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சிதனித்துவமானது .இந்தியாவின் முன்னணி  மாநிலமாக தமிழகம்  திகழ்ந்து  வருகிறது.சமூகநீதி,சமத்துவம், பெண்கள் முன்னேற்றம்  ஆகிய  அம்சங்களை உள்ளடக்கியது .தமிழகத்தின்  வளர்ச்சி அனைவரையும்  உள்ளடக்கிய  தமிழகத்தின் வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சி எனக்குறிப்பிடுகிறோம். ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6 சதவீதம்  ஆகும்.  ஒன்றிய  அரசின் நிதி ஆதாரங்களில்   தமிழகம்  முக்கிய  பங்காற்றுகிறது. கட்சத்தீவை மீட்க இதுவே சரியான  தருணம். இந்திக்கு  இணையாக  தமிழ் மொழியை உயர் நீதி மன்றத்தில் வழக்காடு  மொழியாக அறிவிக்க வேண்டும். நீட்தேர்வு  மசோதாவிற்கு  ஒப்புதல் அளிக்க வேண்டும் .நீட் விவகாரத்தில்   உரிய நடவடிக்கை   வேண்டுமென    தமிழ் நாடு     மக்களின்          சார்பாககேட்டுக்கொள்கிறேன்.உறவுக்கு கை கொடுப்போம்.உரிமைக்குக்குரல் கொடுப்போம். எல்லோருக்கும் எல்லாம் என்றஇலக்கை எய்திட,அனைவரும் இணைந்துசெயல்படுவோம்."

-
பிரதமர்ஆற்றிய உரை

'தமிழக மக்கள்,தமிழ் மொழி,தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தலவ.ஒவ்வொரு துறையிலும்தமிழ் நாட்டைச்சேர்ந்த ஒருவர் சிறந்து விளங்குகிறார்.செவித்திறன் குறைவுடையோர் வென்ற 16 பதக்கங்களில்தமிழகத்தைச்சேர்ந்த 6 பேருக்கு பங்குள்ளது. தமிழ் மொழியை மேலும் வளர்க்க  மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன்செயல்பட்டு வருகிறது.பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப்படிப்பதற்காக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.தமிழ் நாட்டின் வளர்ச்சி பயணத்தின் மேலும் ஓர் அத்தியாயம் இந்த விழா.தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள ரயில்வேதிட்டங்கள் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். வீடு வழங்கும் திட்டம்  மிகவும் முக்கியமான உலகத்தரம்வாய்ந்த திட்டம் .இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன.சிறப்பான சமூக  உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே மத்திய அரசின்  நோக்கம்.எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சரி. அந்த  துறை சார்ந்த திட்டங்கள்அனைத்தும் அனைவரையும் சென்று  சேர்வதை நோக்கி  நாம் பயணிக்கிறோம்.அனைத்துக்கிராமங்களுக்கும் அதிவேகஇணையதள சேவை கிடைக்கும்படி செயல்படுகிறோம்.இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ் செம்மொழிகென்று  சென்னையில் ஒருநிறுவனத்தை உருவாக்கியுள்ளோம்.அதில் நூலகம்,கருத்தரங்க கூடம்,டிஜிட்டல் தொழில் நுட்ப நூலகம்   அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில்  உள்ள  தற்போதைய  நிலை  உங்களுக்கு   கவலை  அளிக்கும் . இந்தியா  இலங்கைக்கு அனைத்து வகையானஉதவிகளையும் வழங்கி வருகிறது .ஜனநாயகம் ,ஸ்திரத்தன்மை ,பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இலங்கைமக்களுக்கு இந்தியா எப்பொழுதும் துணை நிற்கும். '

தமிழக முதலமைச்சர் -பிரதமர் ஆற்றிய உரை
 

Tags :

Share via