ரக்‌ஷா பந்தன்: ஜனாதிபதி, மோடி வாழ்த்து

by Editor / 22-08-2021 05:41:41pm
 ரக்‌ஷா பந்தன்: ஜனாதிபதி, மோடி வாழ்த்து

ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 22 ந்தேதி ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரக்‌ஷா பந்தன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

ரக்‌ஷா பந்தன் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ரக்‌ஷா பந்தன் விழா அன்பு, பற்று, சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான நம்பிக்கையின் அடையாளமாகும். நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் இந்த விழா வலுப்படுத்துகிறது. இந்த சிறப்பு தருணத்தில், மக்கள் தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை காப்பதில் உயர் முக்கியத்துவம் அளிக்கக் கூடிய, அவர்களின் விருப்பங்களை தடையின்றி நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையிலான ஒரு இணக்கமான சமூகத்தை கட்டமைப்பதில் பங்களிப்பை செய்வதற்கு இந்த நன்னாளில் நாம் உறுதியேற்க வேண்டும் ஜனாதிபதி தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரக்‌ஷா பந்தன் என்பது சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அன்பு மற்றும் மரியாதை யின் வெளிப்பாடு.

பெண்களின் பெருமையை நிலைநாட்டவும், பாதுகாப்பான சூழலை எப்போதும் உறுதி செய்யவும் சபதம் ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார். மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளிலும் அந்தந்த மாநில மக்களுக்கு வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via