கொரோனா முற்றிலும் ஒழியும் வரை மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு

by Admin / 27-08-2021 05:22:13pm
கொரோனா முற்றிலும் ஒழியும் வரை மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு

 

அரசு எந்திரங்கள் சிறப்பாக செயல்படுவதால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அவிநாசி அருகேயுள்ள நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.40 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கட்டிட வளாகத்தை அமைச்சர் சாமிநாதன், நீலகிரி எம்.பி.,ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

அப்போது எம்.பி., ராஜா பேசுகையில்:
 
அடுத்த பட்ஜெட்டில் அவிநாசி மக்களின் கோரிக்கை சார்ந்த விஷயங்கள் இடம் பெறும் வகையில் நடவடிக்கை எடுப்பேன் என்றார். அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், அரசு எந்திரங்கள் சிறப்பாக செயல்படுவதால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று முற்றிலும் ஒழியும் வரை மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். கலெக்டர் வினீத் பேசுகையில், அவிநாசியில் வீட்டுமனை கேட்டு ஏராளமானோர் மனு வழங்குகின்றனர்.

ஆனால் நிலம் இல்லை.எனவே தனியாரிடம் இருந்து நிலத்தை வாங்கி மக்களுக்கு வழங்கும் வகையிலான நடவடிக்கை எடுக்க எம்.பி., ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார். நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்ட நிலம் தானம் வழங்கியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

அவிநாசி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் மருத்துவர் அறையில் ரூ. 3 லட்சம் மதிப்பில் நன்கொடையாளர்கள் வழங்கிய குளிர்சாதன எந்திரம், எம்.பி., தொகுதி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டர், ஆலத்தூர், துலுக்கமுத்தூர் மற்றும் நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் நன்கொடையாளர்கள் வழங்கிய மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினர்.

சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 சதவீதம் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் ரூ. 8 லட்சம் மதிப்பிலான சித்த மருத்துவமனை கட்டட விரிவாக்கப்பணிக்கு அடிக்கல் நாட்டினர். தண்டுக்காரன்பாளையம், ஆலத்தூர் பகுதியில் தலா ரூ.25 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலைய புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

 

Tags :

Share via