கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது பற்றிய தவறான புரிதலுக்கு தமிழக அரசு விளக்கம்

by Admin / 01-08-2023 09:35:21am
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது பற்றிய தவறான புரிதலுக்கு தமிழக அரசு விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது பற்றிய தவறான புரிதலுக்கு தமிழக அரசு விளக்கம். இது குறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் துணை திட்டங்களின் நிதியை பயன்படுத்தி உள்ளதாக தேசிய பட்டியல் இனத்திற்கான ஆணையத்தின் ஒரு தனி நபர் புகார் அளித்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் சில செய்திகள் வெளிவந்துள்ளன ஆதிதிராவிடர் துணை திட்டம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டு முறையைப் பற்றிய தவறான புரிதலின் காரணமாகத்தான் இந்த புகார் அதனை பற்றிய செய்திகளும் இணைந்துள்ளன

பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்கள் பட்டினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துணை திட்டங்களை நோக்கமாகும். இந்தத் திட்டங்களின் கேள்வியை பிரிவு மக்கள் மட்டுமே பயன் படத்தக்க திட்டங்கள் ஆகும். பொது திட்டங்களின் கேள்வி மக்கள் பயன் பெறும் திட்டங்களும் உள்ளன இந்த முறையின்படி பொதுத்திட்டத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயன்களுக்கு நிதி தனியாக ஒரு தலைப்பின் கீழ் ஒதுக்கப்படுகிறது. இத்தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை அப்பெரிவு மக்களுக்கு மட்டுமே செலவிட இயலும். இந்த தனி ஒதுக்கீட்டு முறையைத்தான் ஒன்றிய அரசும் பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வு திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தூய்மை பார்வை இயக்கம் போன்ற முக்கிய திட்டங்களுக்கு இந்த முறையில் தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதுபோன்ற தமிழ்நாடு அரசு நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் மூவாலுர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் இலவச சீருடை போன்ற மாநில அரசின் திட்டங்களுக்கும் இதே முறையில் தான் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதே போலத்தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கும் நீதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023- 2024   இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 7000 கோடி பட்டினத்திற்கான  1540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்படுத்தும் இந்த மகத்தான புதிய திட்டத்தில் பட்டியலிடத்தவர் விடுபடாமல் திட்டத்தின் பயன்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில் பட்டினத்திற்கான தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவே ஒதுக்கப்பட்ட 1540 கோடி ரூபாயை பட்டியல் இனத்தவருக்கே மட்டும்தான் செலவிட இயலும் இது மட்டுமின்றி கடந்த 2020 2021 ஆம் ஆண்டு 13680 கோடி ரூபாயாக இருந்த பட்டியலின மக்களுக்கு பயனளிக்க கூடிய ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2023 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 17,0 76 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அடைக்கலமாக கொண்டுள்ள இந்த அரசு பட்டினத்தவரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பட்டியல் இனத்தவர் பழங்குடியின தொழில் முனைவோர்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்க அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் 100 கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஐந்து ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டுடன் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இன தவிர பழங்குடியின சமூகத்தினரின்தொழில்களில் முதலீட்டு செய்வதற்கு தமிழ்நாடு ஆதிதிராவிட பழங்குடியினர்தொழில் நிதி 50 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் இந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டங்கள் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவ்வாண்டு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணை திட்டங்களின் நிதியை சிறப்பாக செயல்படுத்த ஒரு சிறப்பு சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான பல்வேறு தரப்பினுடன் கலந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பட்டியல் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இச்சட்டம் மிக விரைவில் நிறைவேற்றப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் செலவினை சிறப்பாக கண்காணிக்க நிதி துறையில் ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஆதிதிராவிடர் துணை திட்டத்தின் நிதியை பிற திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. பட்டியல் இனத்தவரின் நலன் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் இந்த அரசு உறுதியாக உள்ளது.. பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற இவ்வரசு இந்த நோக்கங்களை அடைய தொடர்ந்து செயல்படும் என்று அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via