புதிய மின் மாற்றிகள் - முதல்வர் தொடங்கி வைத்தார்

by Editor / 29-08-2021 06:04:40pm
புதிய மின் மாற்றிகள் - முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கூடுதல் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க மின்மாற்றிகள் மாற்றும் திட்டத்தின் மூலம் 8,905 புதிய மின் மாற்றிகள் தமிழகம் முழுவதும் ரூ.625 கோடியில் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உள்ளன. முதற்கட்டமாக கொளத்தூரில் 6 இடங்களில் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனில் புதிய மின் மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வருடன் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை மாநகர ஆணையர் மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர்.

 

Tags :

Share via