காலாவதி விதைகளை விற்றால் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை

by Admin / 31-08-2021 04:46:13pm
காலாவதி விதைகளை விற்றால் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை


விதை இருப்பு விபரங்களை இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

காலாவதி விதைகளை விற்கக்கூடாது என்று கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
திருப்பூர், பல்லடம், கொடுவாய், சூலூர் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தினர் விதை இருப்பு பலகையை தினமும் பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யும் அனைத்து விதை ரகங்களுக்கும் முளைப்புத்திறன் சான்றிதழ் பெற்ற பின்தான் விற்பனை செய்ய வேண்டும்.

விதை இருப்பு பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும். அனைத்து பயிர் ரகங்களுக்கும் பதிவுச்சான்று பெற்றிருக்க வேண்டும். இருப்பில் உள்ள அனைத்து விதைக் குவியல்களும் விதை மாதிரி எடுத்து பகுப்பாய்வு முடிவின்படி தரமான விதைகளையே விற்க வேண்டும்.

விதை இருப்பு விபரங்களை இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். காலாவதி விதைகளை விற்கக்கூடாது. இத்தகைய விதிமீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via