மேல்மலையனூர்கோயிலில் செப். 3-6 வரை அனுமதியில்லை

by Editor / 02-09-2021 09:54:27am
மேல்மலையனூர்கோயிலில் செப். 3-6 வரை அனுமதியில்லை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செப். 3-6 வரை அனுமதியில்லை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், கரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 6-ஆம் தேதி அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.கரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களுக்கு அனுமதியில்லை என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via