மயிலாடுதுறையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை 9 பள்ளிகளுக்கு இன்று(ஏப்ரல் 05) விடுமுறை.

by Editor / 05-04-2024 09:39:58am
மயிலாடுதுறையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை  9 பள்ளிகளுக்கு இன்று(ஏப்ரல் 05) விடுமுறை.

மயிலாடுதுறையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை இன்னமும் பிடிபடவில்லை. நேற்று இரவு 3 கூண்டுகள் அமைக்கப்பட்ட நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளில் சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை. எனவே அதே இடத்தில் தான் சிறுத்தை ஒளிந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியநாதபுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் இருக்கும் ‘ஊர்குடி’ என்ற பகுதியில் சிறுத்தையை சிலர் பார்த்ததாக தகவல் தெரிவித்த நிலையில், ஆரோக்கியநாதபுரத்தில் இருக்கும் 9 பள்ளிகளுக்கு இன்று(ஏப்ரல் 05) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags : மயிலாடுதுறையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை

Share via