ஜல்லிக்கட்டு போட்டி வலையங்குளம் பாலமுருகன் 22 காளைகள் பிடித்து முதலிடம் ,. முதலமைச்சர் சார்பாக கார் பரிசு. 

by Admin / 15-01-2026 08:46:01pm
ஜல்லிக்கட்டு போட்டி வலையங்குளம் பாலமுருகன் 22 காளைகள் பிடித்து முதலிடம் ,. முதலமைச்சர் சார்பாக கார்  பரிசு. 

.மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7:25 க்கு  அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக புகுந்த திமில் எடுத்த காளைகளை ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கும் பொருட்டு பாய்ந்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை ஒவ்வொன்றாக திமிலை பிடித்து அடக்கிய மதுரை வலையங்குளம் பாலமுருகன் 22 காளைகள் பிடித்து முதலிடம் பிடித்தார்.  அவனியாபுரம் கார்த்திக் 17 காளைகள் பிடித்து இரண்டாவது இடம் பிடித்தார்.  16 காளைகள் பிடித்த அவனியாபுரம் ரஞ்சித் 1 மூன்றாம் இடம் பிடித்தார். முதல் பரிசு வளையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பாக கார்  ..சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக டிராக்டர் பரிசும் வழங்கப்பபட்டது..போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் 17 காளைகள் பிடித்து இரண்டாவது இடம் வந்த கார்த்திக்கு பைக் பரிசுகளையும் ர்.மூன்றாவது வந்தவராக்கும் காளைக்கும் பாிசாக தங்க நாணயங்கள்அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.. மாவட்ட ஆட்சித் தலைவர் , மதுரை காவல் ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் இப் போட்டியை நேரடியாக நிகழ்ச்சியை கண்டு களித்து நடத்தினர்.

ஜல்லிக்கட்டு போட்டி வலையங்குளம் பாலமுருகன் 22 காளைகள் பிடித்து முதலிடம் ,. முதலமைச்சர் சார்பாக கார்  பரிசு. 
 
Tags :

Share via

More stories

Logo