மலையாளம், தெலுங்கில் மு .க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டும் வீடியோக்கள்;

by Editor / 06-09-2021 09:39:32pm
மலையாளம், தெலுங்கில் மு .க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டும் வீடியோக்கள்;

தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த மே மாதம்7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றார். முதல் - அமைச்சராக பொறுப்பு ஏற்றது முதல் மு . க . ஸ்டாலின் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது .

குறிப்பாக கரோனா ஒழிப்புப் பணிகளில் அவர் காட்டிய தீவிரம் , பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் , உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு ரூ .4 ஆயிரம் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவிப்புகள் தமிழ்நாட்டை தாண்டியும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன .100 நாட்களில் என்னவெல்லாம் ஒரு முதல் - அமைச்சரால் செய்யமுடியும் என்பதற்கு மு . க . ஸ்டாலின்தான் உதாரணம் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக காணொலி பரவி வருகிறது . கேரள மாநிலத்தில் பதிவிடப்பட்ட ஒரு காணொலியில் , மு . க . ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் தமிழ்நாட்டுக்கு செய்த சாதனைகளை அடுக்கடுக்காக ஒருவர் கூறினார் .

இதுதொடர்பாக அவர் பேசிய காணொலி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .

அதில் , அவர் கூறியதாவது :- நான் 3 விஷயங்களை சொல்ல விரும்புகிறேன் . 2 கோடி குடும்பங்களுக்கு ரூ .4 ஆயிரம் ரூபாய் கொடுத்தார் . 2 கோடி குடும்பங்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொடுத்தார் . பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ .3 குறைத்தார் . பெண்களுக்கு , மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் , கரோனா காலத்தில் நமக்காக பணியாற்றிய மருத்துவர்களுக்கு ரூ .30 ஆயிரம் ஊக்கத்தொகை , செவிலியர்களுக்கு ரூ .20 ஆயிரம் ஊக்கத்தொகை , மற்ற சுகாதார பணியாளர்களுக்கு ரூ .15 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கினார் . பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரித்து சலுகைகள் அறிவித்தார் . கரோனாவால் பத்திரிகையாளர்கள் இறந்தால் ரூ .10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார் . பல துறைகளில் வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு ரூ .4,508 கோடி ஒதுக்கியிருக்கிறார் . 100 நாட்களில் ஒரு முதல் - அமைச்சர் செய்த காரியங்கள் இவை . அந்த முதல் - அமைச்சரின் பெயர் பினராயி விஜயன் அல்ல . மு . க . ஸ்டாலின் . இவ்வாறு அந்த காணொலியில் கூறப்பட்டுள்ளது .

இவ்வாறு முதலமைச்சர் மு . க . ஸ்டாலினின் சாதனைகளை கூறும் காட்சிப்பதிவு தெலுங்கிலும் வேகமாக பரவி வருகிறது . பிற மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற பத்திரிகைகளும் முதலமைச்சர் மு . க . ஸ்டாலினின் 100 நாட்களின் வியத்தகு சாதனைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் , அரசியல் விமர்சகர்களின் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன .

 

Tags :

Share via