ஜி.எஸ்.டி அதிகாரிகளை பாத்திர வியாபாரிகள் ஒன்று திரண்டு சிறை பிடித்தனர்.

by Admin / 31-07-2026 06:49:52pm
ஜி.எஸ்.டி அதிகாரிகளை பாத்திர வியாபாரிகள் ஒன்று திரண்டு சிறை பிடித்தனர்.

சென்னை சவுகார்பேட்டையில் ஜி.எஸ்.டி அதிகாரிகளை நேற்று இரவு பாத்திர வியாபாரிகள் ஒன்று திரண்டு சிறை பிடித்தனர். ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் மின்ட் பகுதியில் உள்ள எவர்சில்வர் பாத்திரக் கடைகளில் சோதனை நடத்த முயன்ற பொழுது கடைக்காரர்கள் வந்திருக்கும் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தங்களிடம் அடையாள அட்டை இல்லை என்று கூறியதை அடுத்து வியாபாரிகள் அனைவரும் ஒன்று கூடி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரே ஒரு அதிகாரி தன்னுடைய அடையாள அட்டையை காட்டியதை அடுத்து வியாபாரிகள் அதிகாரிகளோடு தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தனர். சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் அடிக்கடி தங்களை வந்து மிரட்டி 40 லட்சம் 50 லட்சம் லஞ்சம் பணமாக பெற்று செல்வதாகவும் இது குறித்து தாங்கள் நிதி அமைச்சர் ஜிஎஸ்டி ஆணையருக்கும் கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்தனர். தாங்கள் செய்யும் வியாபாரத்தை விட அதிகமாக லஞ்சம் பணம் பயந்து போய் வியாபாரிகள் கொடுத்து விடுவது தொடர்ந்து நடைபெறுவதால் தமிழ்நாடு இயக்கு பாத்திர வியாபாரிகள் சங்கத்தினர் ஜி எஸ் டி அதிகாரிகளிடம் ஆணையர் நேரில் வந்து விளக்கம் அளித்தால் தான் உங்களை வெளியே விடுவோம் என்று அவர்களை சிறை பிடித்து வைத்தனர்.இந்நிகழ்வை அடுத்து தகவல் அறிந்து வந்த யானை கவுனி , பூக்கடை காவல் துறையினர் வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகளை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் அவர்கள் உண்மையான மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் என்பது உறுதி செய்யப் பட்டது. ஜி எஸ் டி அதிகாரிகளின் சோதனையினால் வெறுப்படைந்த பாத்திரக்கடை அதிபர்கள் நூறு பேருக்கு மேல் தங்களுடைய கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜி.எஸ்.டி அதிகாரிகளை பாத்திர வியாபாரிகள் ஒன்று திரண்டு சிறை பிடித்தனர்.
 

Tags :

Share via

More stories

Logo