தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி ,கோவை மலைப்பகுதிகளில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ,சேலம், மதுரை,. காசி ,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யலாம் என்றும் புதுச்சேரி காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிகுடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் 27- ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :



















