இன்று காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
இன்று காலை திருவான்மியூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விாிவு படுத்தப்படுகிறது .இதன் மூலம் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் ஏற்கனவே பயனடைந்து வரும் மாணவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 35 லட்சம் மாணவர்கள் இத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்என்றும் கூடுதலாக 15,454 பள்ளிகள் சேர்க்கப்பட்டு மொத்த 44 ஆயிரத்து 984 அரசு பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த விரிவாக்கத்திற்காக 217.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உப்புமா, கிச்சடி, பொங்கல் போன்ற சத்தான உணவுகளுடன் வாரத்திற்கு இரண்டு நாட்கள் சிறுதானிய உணவுகளும் இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மதுராந்தகம்- தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி இத்திட்டம் அங்கு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















