மின் கணக்கீட்டில் ஒப்பந்த முறை.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்

by Editor / 26-09-2026 12:38:01pm
மின் கணக்கீட்டில் ஒப்பந்த முறை.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிடும் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் மின்வாரியத்தின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து ஒப்பந்தப் பணி முறையை ஊக்குவிக்கும் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கு எதிரானது என அவர் கூறியுள்ளார். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதுடன், இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை என்றும், இதனால் மின் கட்டணக் கணக்கீட்டில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அன்புமணி தெரிவித்தார்.
 

 

Tags :

Share via

More stories

Logo