அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த வீழ்ச்சிக்கு காரணம் ஈரான் மீதான போரே....
நடந்து முடிந்த அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி நாடாளுமன்றத்தின் மேல்சபையான செனட் கீழ் சவையான பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டையுமே கைப்பற்றிய உள்ளது. ஆளும் கட்சியான குடியரசு கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சியின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் ஈரான் மீதான போரே என்று தம் தோல்விக்கான காரணத்தை பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார். சமீப காலமாக அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்ததோடு பொருளாதார சுமையும் போரினால் ஏற்பட்ட விளைவுகளும் அமெரிக்க மக்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கின.
ஈரான் விவகாரத்தில் எடுத்த போர் நடவடிக்கையை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது. ஆனாலும் அதிபர்.டிரம்ப குடிவரவு போன்ற முக்கிய பிரச்சனைகளில் ஜனநாயக கட்சியோடு இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
Tags :


















