உங்களுக்கும் சேர்த்து தான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன்.- த.வெ.க கல்வி விருது வழங்கும் விழாவில் ,முதலமைச்சர் விஜய்.
தமிழக வெற்றிக்கழக கல்வி விருது வழங்கும் விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் களையும் விருதுகளையும் வழங்கினார். முதலமைச்சராகவரவில்லை உங்கள் அண்ணனாக வந்துள்ளேன் என்றும் இப்பொழுது நீங்கள் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம். நன்றாக படித்து, உங்களுக்கு பிடித்தமான உயர்ந்த ஒரு வாழ்க்கையை வாழுங்கள். உங்களுக்கும் சேர்த்து தான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன். உங்களை நம்பித்தான் நானும் அரசியலுக்கு வந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் பெற்றோர்களை நம்பி இருப்பது போல் நான் உங்களை நம்பி இருக்கிறேன். யார் தடை போட்டாலும் உங்கள் தனித்துவத்தை விட்டு விடாதீர்கள். யார் என்ன தடை போட்டாலும் கவலைப்படாதீர்கள். யார், எப்பொழுது எல்லாம் தடை போடுகிறார்களோ? உங்களை தடுக்க நினைக்கிறார்களோ? அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் வெற்றி பெற போகிறீர்கள் என்பதற்கு அது ஒரு அச்சாரமாக இருக்கும் தடைகளை தாண்டிஜெயிச்சிட்டீங்கன்னா, எல்லாருமே வயிற்று எரிச்சல் படுவார்கள். மாணவர்கள் எப்பொழுதும் லஞ்சம் ,ஊழல் மற்றும் போதை பொருள் பக்கம் சென்று விடாதீர்கள் என்றும்கேட்டுக்கொண்டாா்.
Tags :


















