அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள்: வெள்ளை அறிக்கை இன்று தாக்கல்

by Editor / 09-09-2021 09:31:46am
அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள்: வெள்ளை அறிக்கை இன்று தாக்கல்

அதிமுக ஆட்சியின்போது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலைமை என விரிவான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்று சட்டப்பேரவையில் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும் அதிமுக ஆடசியில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை துன்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் குறித்த மசோதாவும் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

 

Tags :

Share via