நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்

by Editor / 12-09-2021 05:01:16pm
நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் பயிற்சிக்காக சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விமான நிலையத்திற்கு பக்கத்திலேயே நொறுங்கி விழுந்தது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக ஐவரிகோஸ்ட்டும் திகழ்கிறது. இந்நிலையில் இந்த ஐவரி கோஸ்ட்டில் பயிற்சி எடுப்பதற்காக விமானி உட்பட 5 பேரை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஹெலிகாப்டர் என்ன காரணமென்று தெரியாமல் விமான நிலையத்திற்கு பக்கத்திலேயே அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.

மேலும் பயிற்சிக்காக ஹெலிகாப்டரில் சென்ற விமானி உட்பட 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதற்கிடையே இந்த விமானத்தை காணவில்லை என்று தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தற்போது மேற்குறிப்பிட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் விபத்து எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via