பணியில் சேர லஞ்சமா ? தீக்குளிக்க முயன்ற ஊழியர்களால் பரபரப்பு....

by Admin / 17-09-2021 05:29:47pm
பணியில் சேர லஞ்சமா ? தீக்குளிக்க முயன்ற ஊழியர்களால் பரபரப்பு....


சேலத்தில் அரசு மருத்துவமனையில் வேலையில் சேர லஞ்சம் கேட்டு மிரட்டி வரும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் உட்பட 3 மருத்துவமனை ஊழியர்கள் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் 40-க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்து தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து திடீரென ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை வாங்கி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

தீக்குளிக்க முயன்ற 3 ஊழியர்களை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மருத்துவமனையில் துப்புறவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 
இதற்கிடையில் பத்மாவதி என்ற தனியார் ஒப்பந்ததாரர் மூலம் மாதம் ரூ5000 முதல் ரூ8000 வரை சம்பளம் என்ற அடிப்படையில் பணி செய்து வந்தோம் என கூறிய அவர்கள், பத்மாவதியின் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் புதிதாக டெண்டர் எடுத்த கிறிஸ்டல் என்ற ஒப்பந்ததாரர் ஏற்கனவே பணியாற்றி வந்தவர்களை நீக்கி விட்டார் என்றும் இது குறித்து மேனேஜர் சின்னுசாமி, சூப்பர்வைசர் சிவசக்தி, கார்த்தி ஆகியோரிடம்  கேட்டபோது புதிதாக  நாங்கள் ஆட்களை நியமித்துள்ளோம் என கூறுவதாக தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தங்களக்கு வேலை கொடுப்பதாக கூறுகின்றனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் பணி சேர லஞ்சம் கேட்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களான தங்களக்கு பணி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

 

 

Tags :

Share via