மும்பை உயிரியல் பூங்காவில் பென்குயின் குஞ்சு பொரித்தது

by Editor / 17-09-2021 07:23:43pm
மும்பை உயிரியல் பூங்காவில் பென்குயின் குஞ்சு பொரித்தது

மும்பை உயிரியல் பூங்காவில் பென்குயின் ஒன்று 2 குஞ்சுகளை பொரித்துள்ளது.

மும்பை பைகுல்லா உயிரியல் பூங்காவில் புது வரவாக 2 பென்குயின்கள் பிறந்துள்ளன. இதனால் அங்குள்ள பென்குயின்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

2016-ஆம் ஆண்டில் இந்த பூங்காவிற்கு பென்குயின்கள் கொண்டுவரப்பட்ட பிறகு, வருவாய் கணிசமாக அதிகரித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஊரடங்கால் பூங்கா மூடப்படுவதற்கு முன்பாக, பென்குயின்களை பார்ப்பதற்காக மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பென்குயின்களை 3 ஆண்டுகள் பராமரிப்பதற்கு, 15 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது அம்மாநிலத்தில், அப்போதே விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via