23 எக்ஸ்பிரஸ் ரயில்களில்  இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றம்

by Editor / 07-03-2022 10:52:52pm
23 எக்ஸ்பிரஸ் ரயில்களில்  இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றம்

கொரோனா தொற்றுக்கு பிறகு கூட்டம் கூடுவதை தவிர்க்க ரயில்களில் ரயில் பெட்டிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட்டன. தற்போது சாதாரண இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக ரயில்களில் இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 

*மார்ச் 16 முதல்*

 ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் (16617),

மதுரை - புனலூர் (16729), புனலூர் - மதுரை (16730),

திருநெல்வேலி -  பாலக்காடு பாலருவி ரயில் (16791),

மதுரை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் (20602),

தஞ்சாவூர் மெயின் லைன் வழி மதுரை - சென்னை எழும்பூர் (22624) விரைவு ரயில்களில் மார்ச் 16 முதல் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத  பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.


*மார்ச் 20 முதல்*

தூத்துக்குடி - மைசூர் (16235),

ராமேஸ்வரம் - செகந்திராபாத் (07686),

மதுரை - கசக்குடா (17616) ஆகிய விரைவு ரயில்கள் 

*ஏப்ரல் 1 முதல்* 

தூத்துக்குடி - சென்னை முத்துநகர் (12694)  ஏப்ரல் 1 முதல்


*ஏப்ரல் 16 முதல்* 

திருநெல்வேலி - சென்னை நெல்லை ரயில் (12632),

மதுரை - சென்னை பாண்டியன் ரயில் (12638),

செங்கோட்டை - சென்னை பொதிகை ரயில் (12662),

ராமேஸ்வரம் - சென்னை போட் மெயில் (16852),

ராமேஸ்வரம் - சென்னை சேது ரயில் (22662) 


* மே 1 முதல்*

ராமேஸ்வரம் - திருப்பதி ரயிலில் (16780) ஏப்ரல் 20 முதலும்

திருச்செந்தூர் - சென்னை செந்தூர் ரயில் (16106),

செங்கோட்டை -  சென்னை  சிலம்பு ரயில் (16182),

மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா ரயில் (16344), 

காரைக்குடி -  சென்னை பல்லவன் ரயில் (12606), 

மதுரை -  சென்னை வைகை ரயில் (12636),

புனலூர் - குருவாயூர் ரயில் (16327), 

ராமேஸ்வரம் - திருச்சி ரயில் (16850) ஆகிய விரைவு ரயில்களில்

இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுகிறது.

இந்த தேதிக்கு பிறகு இருக்கை வசதி முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில் கட்டண தொகை முழுமையாக திருப்பி தரப்படும்.இது சம்பந்தமாக அவர்கள் கொடுத்துள்ள அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.

 

Tags : Conversion of second class seating compartments on 23 express trains into unreserved compartments

Share via