தமிழகத்தில் மேலும் 1,661 பேருக்கு  கொரோனா தொற்று

by Editor / 21-09-2021 04:01:04pm
தமிழகத்தில் மேலும் 1,661 பேருக்கு  கொரோனா தொற்று

தமிழகத்தில்  நிலவரப்படி  1,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
(செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில்  புதிதாக 1 லட்சத்து 52 ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 925 ஆண்கள், 736 பெண்கள் என மொத்தம் 1,661 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 211 பேரும், சென்னையில் 206 பேரும், ஈரோட்டில் 117 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 6 பேரும், தென்காசி, ராமநாதபுரத்தில் தலா 5 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரத்து 169 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 26 லட்சத்து 47 ஆயிரத்து 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 98 ஆயிரத்து 692 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 81 ஆயிரத்து 992 முதியவர்களும் இடம் பெற்று உள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 18 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 23 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 360 பேர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 1,623 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 984 பேர் உள்ளனர். தமிழகத்தில் நேற்று 40 ஆயிரத்து 629 ஆக்சிஜன் படுக்கைகள், 25 ஆயிரத்து 16 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 136 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 73 ஆயிரத்து 784 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via