உள்ளாட்சித் தேர்தல்: 97 ஆயிரம் பேர்  வேட்புமனு தாக்கல்

by Editor / 23-09-2021 03:06:42pm
உள்ளாட்சித் தேர்தல்: 97 ஆயிரம் பேர்  வேட்புமனு தாக்கல்

 

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 97 ஆயிரத்து 831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் நிறைவடைந்தது.


இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 72 ஆயிரத்து 71 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15 ஆயிரத்து 967 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 ஆயிரத்து 671 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 122 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையம், மொத்தம் 97 ஆயிரத்து 831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், நாளை மறுநாள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via