.நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் !

by Writer / 23-09-2021 07:21:14pm
.நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் !


இந்தியாவில் நீட் தேர்வு கட்டாயம் என்று கூறப்படும் நிலையில் தமிழகத்தில் திமுக அரசு மட்டும் கடுமையாக எதிர்த்து வருகிறது. அதை செயலில் காட்டும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானமும்  நிறைவேற்றப்பட்டுள்ளது. காரணம் நீட் என்பது முறைகேடு செய்யும் வகையில் இருக்கிறது என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம்.


 நீட் தேர்வில் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் ரூபாய் 50 லட்சம் வாங்கிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.


2021-ஆம் கல்வியாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடிகளை செய்ததாகக் கூறி, மராட்டிய மாநிலம் நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மற்றும் கல்வி வழிகாட்டுதல் நிறுவனம் மீது நடுவண் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர். ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் மாணவர்களுக்கு மாற்றாக வேறு ஆட்களை நீட் எழுத வைத்து, நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி தில்லியிலும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் 5 மாணவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்தது என்பது தான் அந்த நிறுவனம் மீது கூறப்படும் குற்றச்சாட்டு ஆகும். இதற்காக பல வழிகளில், பல்வேறு நிலைகளில் போலிச் சான்றிதல், போலி அடையாள அட்டை உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ளன.


இது தொடர்பாக ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம், அதன் இயக்குநர் பரிமல் கோட்பள்ளிவார் மற்றும் பல மாணவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடம் இருந்தும் 50 லட்ச ரூபாய் வரை கல்வி நிறுவனம் வசூலித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில், "பரிமல் கோட்பள்ளிவார் மோசடியான வழிகளைப் பின்பற்றி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கிறார். இதற்காக மாணவர்களின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பெரும் பணத்தையும் பெறுகின்றன. பின்னர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடத்தப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து காசோலைகள், மாணவரின் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கோச்சிங் சென்டர் வாங்கி வைத்துக்கொள்கிறது.

மாணவரின் பெற்றோர் ரூ 50 லட்சத்தை அளித்த பின்னரே மதிப்பெண் சான்றிதழ் திரும்ப அளிக்கப்படுகிறது. சிபிஐ எஃஐஆரில் மேலும், "கோச்சிங் சென்டரில் இருப்பவர்கள் மாணவர்களின் விண்ணப்பங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து திட்டமிட்ட தேர்வு மையங்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.ஆள் மாறாட்டம் செய்ய ஏதுவாக மாணவர்களின் விண்ணப்பத்தில் இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் மாற்றியுள்ளனர்.எனவே நீட் தேவை இல்லை என்பதே அனைவரின் விருப்பம்

 

Tags :

Share via