பி.எம்.கேர் நிதி  அரசு நிதி அல்ல  நீதிமன்றத்தில் மத்திய அரசுபதில்

by Editor / 23-09-2021 07:07:24pm
 பி.எம்.கேர் நிதி  அரசு நிதி அல்ல  நீதிமன்றத்தில் மத்திய அரசுபதில்



இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டிய சமயத்தில் மாநில அரசாங்கம் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைவரும் அரசுக்கு மக்களால் முடிந்த நிதி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதில் மத்திய அரசு சார்பில் பி.எம்.கேர் நிதி என்று தனி கணக்கு உருவாக்கப்பட்டு அதில் பணத்தை செலுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தது.. இதற்கு பல முன்னணி தொழில் நிறுவனங்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் கோடிக்கணக்கில் நிதி வழங்கப்பட்டது.. பிரதமரின் நிவாரண நிதியில் சேர்க்காமல், பி.எம்.கேர் நிதி என்று தனியாக தொடங்கப்பட்டதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த பணத்தை அரசியல் சாசனப்பிரிவு 12-ன் படி பொது நிதியாக அறிவிக்க வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் உறுப்பினர்களாக உள்ள நிதியத்தின் தகவல்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதற்கு இன்று எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம் பி.எம்.கேர் கணக்கிற்கு வழங்கப்படும் நிதி அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
அதன் விவரங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அறக்கட்டளையின் பெயரில் இயங்கும் பி.எம்.கேர் நிதியை பொது நிதிக்கு மாற்ற முடியாது என கூறியுள்ளது. மேலும் தகவல் அறியும் சட்டத்தின் படி அந்த விபரங்களை மூன்றாவது நபருக்கு வழங்க முடியாது என்றும் கூறியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி அமித் பன்சால் அடங்கிய அமர்வு செப்டம்பர் 27 ஆம் தேதி அடுத்த விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.

 

Tags :

Share via