தீபாவளி நாளில் காசியில் கங்கா ஸ்நானம் சிறப்பு ஆன்மீக சுற்றுலா ரயில் புறப்பட்டது.

by Editor / 09-11-2023 09:43:23pm
தீபாவளி நாளில் காசியில் கங்கா ஸ்நானம் சிறப்பு ஆன்மீக சுற்றுலா ரயில் புறப்பட்டது.

வடக்கே உள்ள காசி விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்காகவே ஐஆர்சிடிசியின் மூலமாக பாரத் கவுரவ் யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தென்காசியில் இருந்து வாரணாசிக்கு, 'தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை' என்ற பெயரில் பாரத் கவுரவ் யாத்திரை ரயில் இன்று இயக்கப்பட்டது.

 ஐஆர்சிடிசியின் 'தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை' ரயில் இன்று தென்காசிரயில் நிலையத்திலிருந்து அதிகாலை  3.50 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், தஞ்சாவூர், சிதம்பரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், விஜயவாடா, பிரயாக்ராஜ் வழியாக, நவம்பர் 11ம் தேதி இரவு 10.30 மணிக்கு வாரணாசியை அடையும். இந்த ரயில் பயணம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், கயாவில் உள்ள விஷ்ணு பாதை கோயில்  பின்னர் நவம்பர் 13ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கயா, சம்பல்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், ராமேஸ்வரம் வழியாக, 17ம் தேதி இரவு தென்காசி வந்தடைகிறது.முன்னதாக தென்காசிரயில் நிலையத்தில் இந்த ரயிலில் பயணிப்பவர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டு சிறப்பு மாலைகள் அணிவிக்கபபட்டன.


 

தீபாவளி நாளில் காசியில் கங்கா ஸ்நானம் சிறப்பு ஆன்மீக சுற்றுலா ரயில் புறப்பட்டது.
 

Tags : தீபாவளி நாளில் காசியில் கங்கா ஸ்நானம் சிறப்பு ஆன்மீக சுற்றுலா ரயில் .

Share via