கார் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்

by Staff / 06-04-2024 03:20:40pm
கார் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்

மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவில் நடந்த கோர விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுவனை அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக காரை வேகமாக ஓட்டி வந்த 19 வயது இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இந்த விபத்து குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via