வங்க கடலில் மற்றுமொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழக கடலோரப் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இரவு மழைகளும் சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை பெய்ததின் காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையைச் சுற்றி பத்து சென்டிமீட்டருக்கு அதிகமான மழை பதிவாகி உள்ளதாகவும் 21 முதல் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ,ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர் , ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
23ஆம் தேதி வங்க கடலில் மற்றுமொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.மழை நீர் தேங்குவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
Tags :



















