17 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து நேற்று ஐந்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், இன்று நெல்லை, தூத்துக்குடி ,கன்னியாகுமரி, தென்காசி ,திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியில் காரணமாக 17 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி ,கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான தேனீ, திண்டுக்கல், கோயமுத்தூர், நீலகிரி,
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு கடல் பகுதி சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags :

















