காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து விலகியது ஏன்.?

by Editor / 29-09-2021 09:25:36am
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து விலகியது ஏன்.?

பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக சித்து எழுப்பிய கலகக்குரல் கடைசியில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளியது. அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்த காரணத்தால் புதிய முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். 

பஞ்சாபில் தலித் ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், சித்துவுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. அத்துடன் அவரது ஆதரவாளரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, டோபா பிராந்தியத்தைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள், ராணா குர்ஜித் சிங் அமைச்சராக்குவதற்கு எதிராக சித்துவுக்கு எழுதிய கடிதம் எழுதினர். ஏனெனில் அவர் மணலில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 2018 ஆம் ஆண்டில் அமைச்சகத்திலிருந்து விலக்கப்பட்டவர். சித்துவும் கபூர்தலா எம்எல்ஏ ராணா குர்ஜித்தை சேர்ப்பதற்கு எதிராக இருந்தார் என்று அறியப்படுகிறது, ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்களோ சித்துவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் செயல் தலைவரான குல்ஜித் சிங் நாக்ராவை அமைச்சரவையில் இருந்து தூக்கினர்.துணை முதலமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவுக்கு மிக முக்கியமான வீட்டுத் துறையை வழங்கும் முடிவை சித்து ஏற்கவில்லை என்று தெரிகிறது.

முன்னதாக, சுக்ஜிந்தர் சிங் ரந்தா , சித்து முதல்வராவதை முறியடித்தவர் என்பதால் அதிலும் கோபத்தில் இருந்தார்.காங்கிரஸ் அரசு மூத்த வழக்கறிஞர் ஏபிஎஸ் தியோலை அதன் அட்வகேட் ஜெனரலாக நியமித்தது. இது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியது, ஏனெனில் தியோல் முன்னாள் டிஜிபி சுமேத் சிங் சைனிக்கு ஆதரவாக வாதாடியவர் ஆவார். போராட்டக்காரர்கள் மீது வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் போது காவல்துறைத் தலைவர் ஆக இருந்தவர் சுமேத் சிங், இதுவும் சித்துவுக்கு பிடிக்கவில்லை.ஜூலை 19 அன்று பஞ்சாப் தலைவராக நியமிக்கப்பட்ட சித்து, பஞ்சாப் போலீஸ் தலைவர் உட்பட முக்கிய பதவிகளில் தனக்கு விருப்பமான எந்த அதிகாரியையும் பெற முடியவில்லை இப்படியான சூழல்கள் சித்துவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

Tags :

Share via