சிவாஜி கணேசன் பிறந்த நாள்:  சித்திரம் வெளியிட்டு கௌரவித்தது கூகுள்

by Editor / 01-10-2021 02:00:38pm
 சிவாஜி கணேசன் பிறந்த நாள்:  சித்திரம் வெளியிட்டு கௌரவித்தது கூகுள்

பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த நாளையொட்டி, பிரபல தகவல் தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை தனது முகப்பு பக்கத்தில் பதிவிட்டு கௌரவித்துள்ளது.

நடிப்புக்கே தனிப்பெரும் உதாரணமாகத் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவர் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள், தெலங்கு மொழியில் 9 திரைப்படங்கள், ஹிந்தியில் 2 படங்கள் மற்றும் 1 மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நாம் நேரில் பார்த்திராத சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, சரித்திர வீரர்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், கர்ணன் போன்ற கதாபாத்திரங்களில் திறமையாக நடித்து தலைவர்களை நம் கண் முன்னே கொண்டு வந்த நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்.

1952 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி.

அனைத்து திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்று அனைத்து கடவுகளின் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்திய திரையுலகில் செவாலியர் பட்டம் முதல் நடிகர் சிவாஜி கணேசன். இவர் கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன், தாதா சாகெப் பால்கே விருது பல விருதுகள் இவரது நடிப்பின் திறமையை கௌரவிக்கின்றன.

இன்று சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளையொட்டி, பிரபல தகவல் தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை தனது முகப்பு பக்கத்தில் பதிவிட்டு கௌரவித்துள்ளது.

சின்னையா மன்ராயர் - ராஜாமணி தம்பதியருக்கு நான்காவது மகனாக 01.10.1927 ஆம் தேதி பிறந்தவர் கணேசன். கணேசன் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இவர் 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்தே சிவாஜி கணேசன் என்ற பெயர் நிலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via