நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக தொடர்ந்து போராடும்

by Staff / 21-09-2023 05:22:43pm
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக தொடர்ந்து போராடும்

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டு தான் இருக்கும் எனவும், அத்தனை பேரும் களத்தில் இறங்கி போராட வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த திமுக விழா ஒன்றில் உதயநிதி பேசியதாவது: நான் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இதே மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. நான் எந்த மாநாட்டை சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். வரலாற்றுலே அப்படி ஒரு மாநாடு நடக்க கூடாது என்றால், அந்த மாநாட்டை உதாரணமாக சொல்லலாம். நீட் தேர்வு ரகசியத்தை என்னிடம் கேட்க சொல்லி முன்னாள் அமைச்சர் உதயக்குமார் கேட்டுள்ளார். நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம். அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்ய போராடி கொண்டிருக்கிறோம். சட்டசபையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றினோம். நீட் தேர்வால் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். "ஜிரோ" மார்க்நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெரச்ன்டைஸ் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. "ஜீரோ" மார்க் வாங்குறது தகுதியா?. இப்படிப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டு தான் இருக்கும். உதயநிதி மட்டும் போராடினால் பத்தாது. அத்தனை பேரும் களத்தில் இறங்கி போராட வேண்டும்.

 

Tags :

Share via