இந்தியாவில் புதிதாக 26,727  பேருக்கு கொரோனா

by Editor / 01-10-2021 03:23:47pm
இந்தியாவில் புதிதாக 26,727  பேருக்கு கொரோனா



இந்தியாவில் புதிதாக 26,727 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 28,246 பேர் குணமடைந்துள்ளனர்.


இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்குள் குறைந்தது. ஆனால்  பரவல் திடீரென அதிகரித்து தினசரி பாதிப்பு மீண்டும் 23 ஆயிரத்தை தொட்டது.  மேலும் உயர்ந்துள்ளது. 2-வது நாளாக கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.


மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 28,246 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 277 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 224 ஆக உள்ளது.


இந்தியாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 66 ஆயிரத்து 707 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 144 ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 48 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.


உலக அளவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரத்து 61 ஆக உயரந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்து 96 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 21 கோடியே 13 லட்சத்து 28 ஆயிரத்து 498 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்து 155 ஆக உள்ளது.

 

Tags :

Share via