நாளை 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

by Staff / 15-09-2023 01:01:16pm
நாளை 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறை மற்றும் செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இன்று 650 சிறப்பு பேருந்துகளும் நாளை செப்டம்பர் 16 ஆம் தேதி 200 சிறப்புப் பேருந்துகளும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னையிலிருந்து இன்று, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், நாளை 200 பேருந்துகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பிற மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்ல கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via