லோக் ஜனசக்தி கட்சியின் சின்னம் முடக்கம் 

by Editor / 02-10-2021 05:30:16pm
 லோக் ஜனசக்தி கட்சியின் சின்னம் முடக்கம் 


லோக் ஜனசக்தி கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
பீகார் மாநிலத்தி அரசியல் காட்சிகளில் ஒன்று லோக் ஜனசக்தி கட்சி மறைந்த மத்திய அமைச்சர் இராம் விலாஸ் பாஸ்வான் இக்கட்சியை உருவாக்கினார்.


பீகாரில் உள்ள தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர், பிரதிநிதித்துவம் பெற லோக் ஜனசக்தி கட்சி செயல்படுகிறது. தற்போது லோக் ஜனசக்தி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர் அங்கமாக உள்ளது.


இராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பின் அவரின் மகன் சிரக் பாஸ்வான் இந்த கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அதே சமயத்தில், இராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர் பசுபதி பராஸ்-க்கும், சிரக் பாஸ்வானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 
இந்நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சி தலைமை தொடர்பாக சிராக் பஸ்வான் - பசுபதி பராஸ்-க்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Tags :

Share via