9 அடி ஆலமர விழுதை பயன்படுத்தி  19446 கிராம் வெள்ளித் தகடு  பதித்த வெள்ளிதடி 

by Editor / 04-10-2021 04:42:41pm
  9 அடி ஆலமர விழுதை பயன்படுத்தி  19446 கிராம் வெள்ளித் தகடு  பதித்த வெள்ளிதடி 

காஞ்சீபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பெருந்தேவி தாயாருக்கு விழா காலங்களில் கோவிலுக்குள்ளேயே உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் விழாக்காலங்களில் பெருந்தேவித் தாயாரை சுமந்து செல்லும் வகையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் மடத்தின் சீடரான சென்னையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்கின்ற பக்தர் தனது சொந்த செலவில் ரூ.13.35 லட்சம் மதிப்பீட்டில் 9 அடி ஆலமர விழுதை பயன்படுத்தி 19446 கிராம் வெள்ளித் தகடு பதித்து வெள்ளித்தடிகளை செய்திருந்தார்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் தாயார் சன்னதிக்கு வெள்ளி தடிகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து பெருந்தேவி தாயாருக்கு விழாக்காலங்களில் பயன்படுத்த கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

Tags :

Share via