அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்:  எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு

by Editor / 09-10-2021 03:56:41pm
அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்:  எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு



பெரியகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.அன்னபிரகாஷ் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


பெரியகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.அன்னபிரகாஷ் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, ஒன்றியக் கழகப் பணிகளை கவனிப்பதற்கு பொறுப்பாளராக எம்.செல்லமுத்து (பெரியகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அண்ணா தி.மு.க. உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளனர்.

 

Tags :

Share via