தமிழகத்தில் 1,344 பேருக்கு கொரோனா

by Editor / 10-10-2021 04:42:39pm
தமிழகத்தில்   1,344 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 1,344 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 43 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 787 ஆண்கள், 557 பெண்கள் என மொத்தம் 1,344 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 164 பேரும், கோவையில் 137 பேரும், செங்கல்பட்டில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர், தென்காசியில் தலா 3 பேரும், பெரம்பலூரில் 2 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 513 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 26 லட்சத்து 76 ஆயிரத்து 936 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 442 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 86 ஆயிரத்து 833 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 13 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் ஒருவரும் என 14 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 768 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,457 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 26 லட்சத்து 24 ஆயிரத்து 916 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 252 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via