சிறுமி உயிரிழந்த விவகாரம் ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க பிரியாணி உணவகம் சம்மதம்- நிபந்தனை ஜாமின்

by Editor / 22-10-2021 08:08:34pm
சிறுமி உயிரிழந்த விவகாரம் ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க பிரியாணி உணவகம் சம்மதம்- நிபந்தனை ஜாமின்


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி - லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 46). அரிசி ஆலையின் தொழிலாளியாக ஆனந்த் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி பிரியதர்ஷினி. இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 10 வயது லோஷினி என்ற மகளும், 14 வயது சரண் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த செப். 8 ஆம் தேதி ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில், காதர்பாஷா என்பவர் நடத்தி வரும் 7 ஸ்டார் பிரியாணி கடையில் தந்தூரி பிரியாணியை சாப்பிட்டு உள்ளனர்.


பின்னர் வீட்டுக்கு வந்த அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் என உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதே கடையில் அன்றைய தினத்தில் உணவு சாப்பிட்ட 40 க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமணியல் அனுமதி செய்யப்பட்டனர். இவர்களில் சிறுமி லோஷினி மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விஷயம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, உணவுப்பாதுகாப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தி உணவு சமைக்கப்பட்டது உறுதியாகவே, கடைக்கு சீல் வைக்கப்பட்டு கடையின் உரிமையாளர் மற்றும் சமையலர் கைது செய்யப்பட்டனர். ஆரணியில் செயல்பட்டு வரும் பல உணவகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு, கெட்டுப்போன இறைச்சியை கண்டறிந்து சம்பவ இடத்திலேயே அழித்தனர்.


இந்நிலையில், கடையின் உரிமையாளர் அக்பர் பாஷா, சமையலர் முனியாண்டி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரூ.10 இலட்சம் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு கொடுக்க அக்பர் பாஷா உறுதியளித்ததை தொடர்ந்து, அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மேலும், ஆரணி நகர காவல் நிலையத்தில் 2 வாரங்கள் தினமும் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், கடையின் உரிமையாளர் அக்பர் பாஷா தரப்பில் வாதிடுகையில், "கடையை நாங்கள் தரமாக நடத்தி வந்தோம். கவனக்குறைவால் இந்த துக்க நிகழ்வு நடந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளது,

 

Tags :

Share via