ஒரு தடவை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் போகும் ரிவோல்ட் மின்சார பைக்

by Editor / 23-10-2021 03:55:58pm
ஒரு தடவை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் போகும் ரிவோல்ட் மின்சார பைக்



5 மணி நேரம் ஒரு தடவை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் போகும் ரிவோல்ட் மின்சார பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை ரூ.91 ஆயிரம் முதல் உள்ளது. மணிக்கு 85 கி.மீ. வேகம் போகும்.


ரிவோல்ட் மோட்டார்ஸ், 21ந் தேதி இந்தியாவில் 70 நகரங்களில் தனது தயாரிப்பான RV400 மின்சார மோட்டார் பைக்குகளுக்கு முன்பதிவுகள் துவங்கியது. விரைவில் கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் புதிய விற்பனையகங்களைத் தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தின் வலைதளமான www.revoltmotors.com மூலம் முன்பதிவு செய்யலாம். இதன் விலை 91 ஆயிரம் முதல் உள்ளது. ஒரு தடவை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் செல்லும். சிவப்பு, கருப்பு, வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும்.


இந்த புதிய விற்பனை மையங்கள், இந்நிறுவனத்தின் விற்பனை அமைவிடங்களாக செயல்படுவது மட்டுமின்றி, மோட்டார் பைக்கை நேரில் பார்த்து, டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கும். அத்துடன், இதன் வடிவமைப்பையும், சார்ஜிங் செயல்முறையையும் அறிந்துகொள்வதற்கும், சார்ஜிங் பாய்ண்ட்களை நிறுவுவது எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளவும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வாய்ப்பாகவும் இது அமையும். டெஸ்ட் டிரைவ்களுக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் அவர்களது வாகனம் ஓட்டும் முறைகள் பற்றிய ஒரு உணர்வினையும் இதன்மூலம் பெறலாம் என்று ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா தெரிவித்தார்.


ரிவோல்ட் பைக் தற்போது பெங்களளூரு, டெல்லி, மும்பை, புனே, சென்னை, அகமதாபாத் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது.


RV400 பைக், ஒரு மணி நேரத்திற்கு 85 கி.மீ. என்ற வேகத்தை கொண்டது. லித்தியம் அயான் பேட்டரி மூலம் ஆற்றலைப் பெற்று 3 கி.வா.மோட்டாரால் இயக்கப்படுகிறது. இந்த பைக்கை மை ரிவோல்ட் செயலி வழியாக இயக்கலாம். இதில் செல்போன் செயலி ஒருங்கிணைக்கும் 4ஜி இணைப்பு பேட்டரி ஆயுள் நிலை பற்றி தெரிவிக்கும். அருகில் உள்ள சர்வீஸ் மையம் தகவல் கிடைக்கும் என்றார் அவர்.

 

Tags :

Share via