காங்கோ: பயங்கரவாதிகள் தாக்குதல் பொதுமக்கள் 17 பேர் பலி

by Editor / 23-10-2021 04:48:58pm
 காங்கோ: பயங்கரவாதிகள் தாக்குதல் பொதுமக்கள் 17 பேர் பலி

காங்கோ நாட்டில் பயங்கரவாதிகள்நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் உயிரிழந்தனர் .


மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது
காங்கோவிற்கு அருகே அமைந்துள்ள உகாண்டா நாட்டில் செயல்பட்டுவரும் கூட்டணி ஜனநாயக படைகள் என்ற பயங்கரவாத அமைப்பு இரு நாட்டிலும் பொதுமக்கள் , பாதுகாப்பு படையினரை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றது .கடந்த 2017 ஆம் ஆண்டு அய் . எஸ் . அமைப்புடன் இணைந்த இந்த கூட்டணி ஜனநாயக படையை காங்கோ அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது .


இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கவும் , காங்கோ , உகாண்டா நாடுகளில் அரசியல் நிலைத்தன்மையை மீட்டு அமைதியை ஏற்படுத்தவும் உள்நாட்டுப்படையுடன் இணைந்து அய் . நா . படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர் .
இதனால் கிளர்ச்சியாளர்கள் குழுவினருக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் , காங்கோ நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தின் பெனி நகரில் உள்ள மயிலி , கலிம்போ மற்றும் டொயோ ஆகிய கிராமங்களுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்தனர் .

போராட்டம் கடந்த 32 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து காங்கோவில் துறைமுக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, தலைநகர் கின்ஷாசாவில் உள்ள துறைமுக அலுவலகத்தில் கண்ணாடிகளை உடைத்து, பொருட்களுக்கு தீ வைத்து எரித்தனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசியதை அடுத்து, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிக் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

 

Tags :

Share via