பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது

by Staff / 18-03-2024 11:49:26am
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி 23 ஆம் தேதியும், 24 ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. முன்னதாக திருஆவினன்குடி முருகன் கோவில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றப்பட்டது. பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி 23 ம் தேதியும், 24 ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்து கொள்ளக்கூடிய பக்தர்கள் பலரும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர். பங்குனி உத்திரத் திருவிழாவின் முதல் நாளில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், தீர்த்த குடம் எடுத்தும் மலையடிவாரத்திலிருந்து மேளதாளத்துடன் ஆடியபடி மலைமீது சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்

 

Tags :

Share via